ஆல்யா மனசா..
இல்லத்தரசிகளின் சொர்க்கமாக இருப்பது தொலைக்காட்சியில் வரும் நாடகங்கள் தான். விஜய் டிவி, சன் டிவி, என கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் நாடகங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் யூடியூபிலும் நாடகங்கள் ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது. தற்போது ட்ரெண்டிங்கில் விஜய் டிவியின் நாடக தொடர்களே அதிகம் இடம்பெற்று வருகிறது அதில் ஒன்றுதான் ராஜா ராணி தொடர்.
ஏற்கனவே ஹிந்தியில் வெளிவந்த ஒரு தொடரின் தமிழ் ரீமேக் ஆகும். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஆல்யா மனசா நடிக்கிறார். இவருக்கு அண்ணியாக VJ அர்ச்சனா நடிக்கிறார்.
சீரியலில் பகைவர்களாக இருந்தாலும் நிஜத்தில் நண்பர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி டிக் டாக் வீடியோ செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஒரு கோவிலில் இவர் ஆடிய வீடியோ ஒன்று பயங்கர வைரல். இவர்களது வீடியோக்கென ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர்களது புது வரவை பார்த்த ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கிறார்கள்.
View this post on Instagram