பிரியா பவானி ஷங்கர்..
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க,
எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு இன்றி இருக்கும் பிரியா பவானி ஷங்கர், நேற்று தனது இன்ஸ்டா கணக்கில் Live வந்த இவரிடம் ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.
அப்போது ரசிகர் ஒருவர், வசூல் ராஜா சாம்பு மவன் பாணியில் “What is the procedure to marry you..??” என்ற கேள்விக்கு, “என்னை கல்யாணம் செய்ய உங்களுக்கு செயல்முறை தெரியலைன்னா அது பெட்டர், ஏனென்றால் இப்போது புதிதாக ஒருவருக்கு ஓகே சொல்வது மிகவும் சிக்கலானது” என்று வேடிக்கையாக கூறினார்.