பிரிந்த காதல் ஜோடி திருமண நாளில் ஒன்று சேர்ந்த தருணம் ! ரஞ்சித், பிரியாராமன் நெகிழ்ச்சியான பதிவு !

120

ரஞ்சித்-பிரியாராமன்..

90களின் நடிகர்கள் தற்போது காமெடியன்களாகவும் சீரியல்களிலும் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், பொன்னம்பலம் ஆகியோர் படங்களில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தாலும் நடிகர் ரஞ்சித் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம், நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, சேரன் சோழன் பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளார் ரஞ்சித். இவருடன் நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்தவர் பிரியா ராமன்.

இதுமட்டுமில்லாமல் வள்ளி, சூரிய வம்சம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இருவரும் 1999இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தற்போது இருவரும் சின்னத்திரையில் செம பிஸியா உள்ளனர். ரஞ்சித் விஜய் டிவியில் ஒரு சீரியலிலும், பிரியா ராமன் ஜீ தமிழ் சீரியலிலும் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இவர்களது திருமண நாள் வந்தபோது அதை இருவரும் சேர்ந்து கொண்டாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாண நாளில் இருவரும் சேர்ந்து எடுத்த செல்பியை நடிகர் ரஞ்சித் பகிர்ந்துள்ளார். அதில் “என் அன்பு தங்கங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களால் எங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாகிறது.

நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே” என பதிவிட்டுள்ளார். அதே புகைப்படத்தை பகிர்ந்துள்ள ப்ரியா ராமனும் அன்பும் நன்றிகளும் எனக் கூறியுள்ளார். இவர்களுக்கு சின்னத்திரை வட்டாரங்கள் மட்டுமல்லாமல் அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..