தனது மகளின் 16வது பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய சீரியல் நடிகை பிரியா- புகைப்படங்கள் இதோ!!

151

பிரியா பிரின்ஸ்..

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பிரியா பிரின்ஸ்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் கடவுள் முருகன் தொடர் மூலம் மக்களிடம் அதிகம் ரீச் ஆனவர்.

இந்த சீரியலுக்கு முன் செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வந்தார். கடந்த ஆண்டு விஜய்யில் Mr&Mrs சின்னத்திரையில் தனது கணவருடன் பங்குபெற்றார்.

32 வயதாகும் இவருக்கு ஒரு மகள் உள்ளார், அவரின் 16வது பிறந்தநாளை வீட்டிலேயே அழகாக கொண்டாடியுள்ளார் பிரியா. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்.

அதைப்பார்த்ததும் ரசிகர்கள் அட இந்த சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியமாக கமெண்ட் செய்கின்றனர்.