தன்னுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்த தமிழ் நடிகர்கள்!!

867

தமிழ் நடிகர்கள்

தமிழ் திரையுலகில் தங்களுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் குறித்து இங்கு காண்போம்.

எம்.ஜி.ஆர்-ஜானகி : கடந்த 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஜானகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்திருந்தனர்.

பாக்யராஜ்-பூர்ணிமா : திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பாக்யராஜும், பல தென்னிந்திய மொழிகளில் நடித்த பூர்ணிமாவும் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அஜித்குமார்-ஷாலினி : நடிகர் அஜித்குமாரும், நடிகை ஷாலினியும் ‘அமர்க்களம்’ என்ற ஒரே படத்தில் தான் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்போது தான் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, படம் வெளியான அடுத்த ஆண்டிலேயே(2000) இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சூர்யா-ஜோதிகா : ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன் முறையாக ஒன்றாக நடித்த சூர்யா-ஜோதிகா ஜோடி, அதன் பின்னர் காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் இணைந்து நடித்தது. ஆனால், முதல் படத்திலேயே இவர்களின் காதல் மலர்ந்துவிட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

பிரசன்னா-சினேகா : நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கோவா, அச்சமுண்டு அச்சமுண்டு போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சரத்குமார்-ராதிகா : சரத்குமார்-ராதிகா இருவரும் 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம் போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பொன்வண்ணன்-சரண்யா : இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணன், நடிகை சரண்யாவை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கருத்தம்மா, பசும்பொன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

சுந்தர்.சி-குஷ்பு : இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சுந்தர்.சி கடந்த 1997ஆம் ஆண்டு நடிகை குஷ்புவை திருமணம் செய்துகொண்டார். சுந்தர்.சி இயக்கிய முதல் படமான ‘முறை மாமன்’ திரைப்படத்தில் குஷ்பு கதாநாயகியாக நடித்துள்ளார்.