மாநாடு படக்குழுவினர்கள்..

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாநாடு.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. மேலும் இன்று இப்படத்தில் இருந்து முதல் சிங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் மாநாடு முதல் பாடல் வெளியானதால் படக்குழுவினர்கள் பலரும் இன்று ட்விட்டர் Space-ல் மாநாடு குறித்து உரையாடி வந்தனர்.

நடிகர் சிம்பு, யுவன், வெங்கட் பிரபு, எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டு மாநாடு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை கூறினார்கள்.

இதனிடையே இந்த நிகழ்ச்சியின் இறுதியில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அனைத்து நட்சத்திரங்களும் சேர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தனர்.


