விஜய்க்கு நடனம் ஆடி வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ !

128

கீர்த்தி சுரேஷ்…

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்துக் கூறி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், நேற்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த ‘யூத்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடலுக்கு நடனமாடி தனது வாழ்த்தை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.