முனி, காஞ்சனாவிற்கு ரெஸ்ட்.. வெற்றிமாறன் எழுத்தில் Action படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்..!

209

ராகவா லாரன்ஸ்..

தமிழ் சினிமா கண்ட வெற்றி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் வடசென்னை ஆடுகளம் விசாரணை போன்ற தலை சிறந்த படங்களை இயக்கியுள்ளார்.

அவரது படங்களுக்கு பெரும் பலமாய் இருப்பது அவரது எழுத்துக்கள் தான். தற்போது தன் படம் இல்லாது, துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார் வெற்றிமாறன்.

எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி பட்டாஸ் போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவரது படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் வகையறாதான். அந்த வரிசையில் தற்போது அதிகாரம் என்ற படத்தை இயக்க உள்ளார். அதன் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். படத்தின் மோஷன் போஸ்டரில் துப்பாக்கி, பாஸ்போர்ட் என்று வருவதை வைத்து பார்த்தால் இதுவும் கண்டிப்பாக ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்று அப்பட்டமாக தெரிகிறது.

எது எப்படியோ முனி, காஞ்சனா வரிசையில் இருந்து தப்பித்து ராகவா லாரன்ஸ் வேறு படம் பண்ணினால் தேவலாம் என்ற ரசிகர்கள் கூக்குரல் கேட்டு விட்டது போல மகிழ்ச்சி.