என்ன பண்ணாலும் Cute-ஆ இருக்கு ! கைக்குழந்தை சிவாங்கி..! Recreation வீடியோவால் குவியும் லைக்ஸ்..!

64

சிவாங்கி..

விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. DD, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

அந்த வரிசையில் சூப்பர் சிங்கரில் தனது வாழ்க்கையை தொடங்கி குக் வித் கோமாளி மூலம் பெரும்பான்மை மக்களுக்கு தெரிய ஆரம்பித்தவர் சிவாங்கி. குக் வித் கோமாளி முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் தான் மக்கள் இவரை அதிகம் கவனிக்கத் தொடங்கினார்கள்.

புகழுடனும் அஸ்வின் உடனும் இவர் செய்த லூட்டிகளை மக்கள் ரசித்து வருகின்றனர். சிவாங்கி இல்லாத குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்ற அளவுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமாக கூடிப் போய் உள்ளனர்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தொடர்ந்து வீடியோக்களும் புகைப்படங்களும் பதிவேற்றி வருகிறார். தான் சின்ன வயதில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை தற்போது வளர்ந்த பின் மீண்டும் போஸ் கொடுத்து அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அவரது குழந்தை தனத்தை ரசிகராய் போன மக்கள் தற்போது அந்த வீடியோவை பார்த்து நீங்கள் எப்போதும் குழந்தைதான், என்ன பண்ணாலும் Cute – ஆ இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)