“நயன்தாராவோடு எப்போ கல்யாணம்!…” முதல் முறையாக மனம் திறந்த விக்னேஷ் சிவன் !

430

விக்னேஷ் சிவன்..

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை. தற்போது அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. மோடிக்கு பிறகு அதிகமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார் நயன்தாரா விக்னேஷ் சிவன்.

போர் அடிக்கும்போதெல்லாம் Bag எடுத்து மாட்டிகிட்டு எங்கையாவது கிளம்பி போறத வழக்கமாக வைத்திருக்கும் இந்த காதல் ஜோடியின் நெருக்கமான புகைப்படங்களை அடிக்கடி பார்க்கலாம்.

இப்போதுகூட கொச்சினுக்கு தனி விமானத்தில் இந்த ஜோடிகள் சுற்றுலா வந்ததை நாம் காண முடிந்தது. தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஷ் சிவன் நயன்தாரா ரோடு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் ஒன்றை கூறியுள்ளார்.

“கல்யாணத்திற்கு ரொம்பச் செலவாகும், அந்த செலவு எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். Corona முடிந்துவிட்டால் கல்யாணம் தான்” என்று பதில் கூறியுள்ளார்.