கிரிக்கெட் வீரர் ரோஹித்தை கரம் பிடித்த இயக்குநர் ஷங்கர் மகள்! திருமணத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் ! வைரலாகும் புகைப்படங்கள் !

105

ஷங்கரின் மகள்..

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக வலம் வரும் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் காலை 11.15 மணிக்கு இயக்குநர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தொழிலதிபர் தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மணமகன், மணமகளின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் , நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.

அவர்களுக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.