பிக் பாஸ் சாண்டி மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் நடிப்பில் 3:33 படத்தின் டீசர் வெளியானது..!

158

3:33 டீசர்…

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்.

தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் இவர் ‘3:33’ என்ற திரில்லர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் சரவணன், ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 3:33 படத்தின் டீசரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .‌ தற்போது இந்த மிரட்டலான டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.