மீண்டும் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

110

மீண்டும்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயந்தாரா, ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.

கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் தனி விமானம் ஒன்றில் பயணம் செய்து கொச்சிக்கு வந்தனர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலானது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த விக்னேஷ் சிவனிடம், ஒரு ரசிகர், நயன்தாராவுடன் தற்போது எடுத்துக்கொண்ட செல்பியை பதிவிடும் படி கேட்டுள்ளார்.

அதற்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவுடன் நெருக்கமாக செல்பி எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைபடத்தை நீங்களே பாருங்கள்..