விக்னேஷ் சிவன்..

நயன்தாரா என்னதான் டாப் ஹீரோயினாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல என்கிற ரேஞ்சுக்கு இந்த காதல் தீ பரவுகிறது.

இந்தநிலையில் நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவை இயக்குகிறார் விக்கி.

விக்னேஷ் சிவன் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த முறை வித்தியாசமாக லைவ் சாட் வந்து உள்ளார்.

அப்போது நயன்தாராவை குறித்து ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் கேட்டார்கள். இருந்தாலும் கோபம் கொள்ளாமல் பொறுமையாக எல்லா ரசிகர்களுக்கும் பதிலளித்திருந்தார்.

“நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இருக்கா?” என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்க உடனடியாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் ’”நான் முத்தம் கொடுப்பதில் பிசியாக இருக்கும்போது யாரோ ஒருவர் புகைப்படம் எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.



