ராஷ்மிகாவுக்கு ப்ரப்போஸ் செய்ய ஓர் அரிய வாய்ப்பு.. இப்படிலாமா உசுப்பேத்தி விடுவாங்க.!

94

ராஷ்மிகா மந்தனா..

கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இருப்பினும் 2018ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலமாகவே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்ததன் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களையும் தன்வசம் இழுத்தார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் எஸ் கே, உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா ரசிகர்களிடம் அடிக்கடி கலந்துரையாடுவார். அதிலும் தனது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் கமெண்ட்ஸ் களுக்கு சாதுரியமாக பதில் அளிப்பதில் ராஷ்மிகா கைதேர்ந்தவர்.

அந்த வரிசையில் ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா தன்னை அழகாக ப்ரொபோஸ் செய்து வீடியோ அனுப்பும் படி கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட பலரும் தற்போது வீடியோ எடுக்க துவங்கி இருப்பார்கள். என்ன பாஸ் நீங்க இன்னும் வீடியோ எடுக்கலையா.?