தமிழே தெரியாமல் கொடிகட்டி பறக்கும் விஜய் டிவி ஆங்கர்.. இவங்களுக்கு குரு நம்ம மா.கா.பா தானாம்!

462

பிரியங்கா..

தமிழே தெரியாமல் வந்து தமிழின் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளரானவர். இத்தகைய சிறப்பை பெறும் “ஆங்கர்” யார் தெரியுமா அவர் வேறு யாருமல்ல விஜய் டிவியின் “பிரியங்கா”தான்.

இவர் அம்மா அப்பாவின் சொந்த ஊர் மகாராஷ்ட்ரா தானாம். பிறப்புக்கு ஓர் இடம் பிழைக்க ஓர் இடமென பொதுவான இந்தியர்களின் தத்துவமே வாழ்வானது இவர்களுக்கும். மராட்டியத்திலிருந்து கர்நாடகத்திற்கு நகற்றியது பிரியங்கா குடும்பத்தினரையும் கூட.

கர்நாடகத்தை நோக்கி நகர்ந்தது பிரியங்காவின் குடும்பம். 1990ல் பிறந்த பிரியங்கா என்கிற “பிரியங்கா தேஷ்பாண்டே” தன் பள்ளிப்படிப்பை அங்கேயே தொடர்ந்தார். அவரின் 14ஆம் வயதில் பள்ளிப்பருவத்திலேயே தந்தைய இழந்த பிரியங்காவிற்கு எல்லாமே அவர் தாய் தானாம்.

தந்தையின் இறப்போடு சென்னைக்கு வந்தது பிரியங்கா குடும்பம் அவரது அம்மா ஒரு சிவில் என்ஜினீயர் என்பதால் படித்த பட்டம் பிழைப்பை தேடி தந்தது. பள்ளிப்படிப்பை முடித்த பிரியங்கா தன் கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜில் படித்தார். விசுவல் கம்யூனிகேசன் முடித்த பிரியங்காவிற்கு “விமான பணிப்பெண்” வேலை தான் கனவு.

ஐ.பி.எல் ப்ரமோட்டராக அவதாரமெடுத்த பிரியங்காவிற்கு மைக் கைக்கு எட்ட வில்லை. அப்போது ஏற்ற சபதம் தான் இப்போது அவரை மைக்கில் மாஸ் காட்ட வைக்கிறது.

கனத்த குரல் கடும் சிரிப்பென கலகலப்பாக்கும் பிரியங்கா முதலில் அறிமுகமானது சன் டிவியல் தான் பிறகு விஜய் டிவியில் வாய்ப்பு வரவே சன் டிவிக்கு டாட்டா காட்டினார். விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்காவிற்கு மாகாபா ஆனந்தின் சப்போர்ட் எப்போதும் உண்டாம்.

இப்படியாக படிப்படியாக உயர்ந்த பிரியங்கா தேஷ்பாண்டே 2018ல் சிறந்த தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை வென்றெடுத்தார்.