அனுஷ்கா மீது தீரா ஆசையில் 2 தமிழ் நடிகர்கள்.. ஜோடி சேர்க்கச் சொல்லி அடம் பிடிக்கிறார்களாம்!!

252

அனுஷ்கா..

வயதானாலும் ஒரு சில நடிகைகளுக்கு இளம் நடிகர்கள் மத்தியில் ஒரு க்ரேஸ் இருக்கும். அந்த நடிகைகளுக்கு வயது அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என ஜோடி போட துடிப்பார்கள். அப்படித்தான் அனுஷ்காவுடன் ஜோடி போட 2 தமிழ் நடிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனுஷ்கா தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். அதுவும் அவரது இளமைக் காலங்களில் அவரைப் பார்த்தால் பிடிக்கவில்லை என்று சொல்ல வார்த்தையே வராது. அந்த அளவுக்கு பார்த்தவுடனே பத்திக்கும் தோற்றம்.

ஆனால் சமீப காலமாக உடல் எடைகூடி கொஞ்சம் பார்ப்பதற்கு வயதான ஆண்டி போல் ஆகிவிட்டார். இருந்தாலும் உடல் எடை கூடுவதற்கு முன்னர் வரை அழகாக இருந்த அனுஷ்காவுடன் அப்பவே நடிக்க வேண்டும் என தீர்மானமாக இருந்தார்களாம் இரண்டு நடிகர்கள்.

அவர்களில் ஒருவர் இசை அமைப்பாளராக இருந்து நடிகரானவர். இன்னொருவர் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிகர். இந்த இரண்டு நடிகர்களின் பெயரும் ஒரே வார்த்தையில் தான் தொடங்கும். அது கூட அந்த டாப் நடிகரின் பெயரில்தான் ஆரம்பிக்கும்.

இவர்கள் இருவரும் சினிமாவுக்கு வந்து கொஞ்சம் பிரபலமான நடிகர்களாக வலம் வரும்போதே அனுஷ்காவுடன் நடிக்க ஆர்வம் காட்டினார்களாம். அப்போது அனுஷ்கா வேற லெவல் அழகில் இருந்தார். இருந்தாலும் தற்போது அனுஷ்கா எப்படி இருந்தாலும் பரவாயில்லை அவருடன் நடிக்க வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் இந்த நடிகர்கள்.

அதேநேரம் தற்போது அனுஷ்கா மார்க்கெட் இல்லாமல் தடுமாறும் நிலையில் காய் கனியும் தருணத்தில் உள்ளது. இதன் காரணமாக தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் அனுஷ்காவை ஜோடியாக்குங்கள் என கோரிக்கை வைக்கிறார்களாம்.