புட்டி கண்ணாடி, வெள்ளை தாடி என செம ஸ்டைலாக இருக்கும் பீஸ்ட் விஜய்.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

146

விஜய்…

விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் சர்கார் படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் பீஸ்ட். இளம் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சில சண்டைக் காட்சிகளும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதுமே மற்ற நடிகர்களைவிட விஜய் படங்களுக்கு புரமோசன்களை எக்கச்சக்கமாக செய்வார்கள். இது குறித்து ஒரு வாதமே இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.

ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கும் நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் படத்தை தவிர மற்ற படங்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறது என ரசிகர்கள் கு.ற்.ற.ம்சா.ட்டி வருகின்றனர்.

ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பீஸ்ட் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி விட்டது. உலகப் புகழ்பெற்ற புட்டபொம்மா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் என்பவர் பீஸ்ட் படத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஜானி மாஸ்டர் பீஸ்ட் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் விஜய் கருப்பு முடி, வெள்ளை தாடி, கருப்பு கண்ணாடி என ஆளே ஸ்டைலாக உள்ளார். இந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் செம வைரல்.

இதோ அந்த புகைப்படங்கள்…