பீஸ்ட் படத்தில் தற்போது எடுக்கப்பட்டு வரும் காட்சி, வெளியான புதிய அப்டேட்!

176

பீஸ்ட்..

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடந்து வந்தது, இதில் நடிகை பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனி விடுதியில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அங்கு பாடல் காட்சி மட்டுமின்றி டயலாக் அதிகம் உடைய காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.