நயன்தாராவின் வீட்டில் நடந்தது என்ன…? திடீரென மருத்துவமனைக்கு சென்ற காரணம்… பரபரப்பில் திரையுலகம்!!

85

நயன்தாரா..

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.

இவர் கடந்த 5 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். சுமார் 5 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள்,

விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி நயன்தாராவை குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும்,

அவர்களது நிர்ப்பந்தம் காரணமாக நயன்தாராவும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாகவும் மலையாள ஊடகங்களில் செய்திகள் கூறப்படுகிறது.

இதனால் அடுத்த சில மாதங்களில் நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.