பாகுபலி பாணியில் வெளியாகும் துருவ நட்சத்திரம்!!

129

துருவ நட்சத்திரம்..

2017-ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலரது நடிப்பில் தொடங்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம்.

2018ஆம் ஆண்டிலேயே திரைக்கு வரவேண்டிய இப்படம் பின்னர் 2019ல் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டது. அப்போதும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடும் வேலைகளில் படக்குழு இறங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதோடு, படத்தின் மொத்த நீளம் நான்கறை மணிநேரம் இருப்பதால் பாகுபலி படத்தைப்

போன்று இரண்டு பாகங்களாக இப்படத்தை வெளியிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.