அமீர்கானுடன் மூன்றாவது திருமணமா? திருமணத்தை பற்றி ஓப்பனாக கூறிய நடிகை!!

133

அமீர்கானுடன்..

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தான் அமீர்கான் சமீபத்தில் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.

இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா சாய்க்கை,

அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்ய உள்ளதாகவும், இதன் காரணமாகவே விவாகரத்து செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா வட்டாரமே இதை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை பாத்திமா சனா சாய்க் வதந்தி குறித்து பேசியுள்ளார்.

அதில், “முன்பெல்லாம் இதுபோன்ற செய்திகள் வரும்போது தனக்கு கஷ்டமாக இருக்கும். இப்போது அப்படி இல்லை. காரணம் வதந்திகள் அளவுக்கதிகமாக பரவுவது வழக்கமாகி விட்டது.

இதை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இந்த பிரச்சனையை கண்டுக்கொள்ளாமல் அப்டியே விட்டுவிட்டால் அதுவே தானாக அடங்கி விடும்” என கூலாக பதிலளித்துள்ளார்.