யூடியூப் நடிகை தேஜூ அஷ்வினிக்கு குவியும் பட வாய்ப்புகள்.. அடுத்த கிரஸ் இவங்கதான்!

136

தேஜூ அஸ்வினி…

யூட்யூபில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் தேஜூ அஸ்வினி. இவர் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சந்தானத்துடன் சேர்ந்து இவர் ஆடிய வலி மாங்கா வலிப் என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக இவருக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை சினிமாவில் ஏற்படுத்திக் கொடுத்தது.

சமீபகாலமாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் புகழ் பெறுபவர்கள் சினிமாவில் ஈசியாக படவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

அதிலும் இவருக்கு வேற லெவல் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகும் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இந்த பட அறிவிப்பு வெளியாவதற்கு உள்ளேயே அவருக்கு இன்னும் சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

வரும் காலத்தில் பிரியா பவானி சங்கர் ரேஞ்சுக்கு அஸ்வினி வருவார் என இப்போதே கொலிவுட்டில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. தேஜூ அஸ்வினி,

அஸ்வின் படம் மூலம் அறிமுகமானாலும் அவருக்கு சில முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் வேண்டும் என எதிர்பார்க்கிறாராம். அதுமட்டுமில்லாமல் கிளாமர் காட்டுவதற்கும் எந்த தயக்கமும் இல்லை என தூதுவிட்டுள்ளாராம் அஸ்வினி.