தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளை பக்கத்தில் பிரச்சனை- திடீரென நடக்கும் ஆபரேஷன், அவரே வெளியிட்ட தகவல்!!

100

அர்ச்சனா..

தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒருவர் அர்ச்சனா. இவர் பணிபுரியாத முன்னணி தொலைக்காட்சியே இல்லை என்று கூறலாம்.

சன், விஜய், ஜீ என எல்லா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஜீ தமிழில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிவந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு வந்தார்.

அந்நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து விஜய்யிலேயே நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகிறார்.

அவர் இப்போது Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த நிலையில் அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை போட்டுள்ளார்.

அதாவது அவரின் மூளை பக்கத்தில் சில பிரச்சனை இருப்பதாகவும் அதனால் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு பின் எனது நிலைமை எப்படி இருக்கும் என தனது மகள் அறிவிப்பாள் என கூறியுள்ளார்.