தனுஷின் D43 படத்திலிருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

101

D43..

தனுஷ், தற்போது ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

மேலும் சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இப்படத்திலிருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகி விட்டதாக வதந்திகள் வெளியாகின.

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கார்த்திக் நரேன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்முலம் சமூக வலைத்தளத்தில் பரவிய அணைத்து வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..