சென்னை மருத்துவமனையில் மரணமடைந்த பிக் பாஸ் பிரபலம் – சோகத்தில் திரையுலகம்!

201

பிக்பாஸ் பிரபலம்..

சின்னத்திரை தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று தான் தெலுங்கு பிக் பாஸ்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின், முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் நடிகரும், விமர்சகருமான கத்தி மகேஷ்.

நடிகர் கத்தி மகேஷுக்கு சில தினங்களுக்கு முன் காரில் சென்றுகொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த கத்தி மகேஷ் நேற்று இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தகவல் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமல்லாமல், திரையுலகினரையும், சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.