ரவுடி பேபியாக மாறிய நடிகை காஜல் அகர்வால் – வெளியான சூப்பர் தகவல்!

99

காஜல் அகர்வால்..

நடிகை காஜல் அகர்வாலின் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால், ‘ரவுடி பேபி’ எனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ராஜா சரவணன் என்பவர் இப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார்.

மேலும் இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.