வலிமை பட ரிலீஸ் குறித்து வெளியான அதிகாரப்பூர்வமான அறிக்கை!

159

வலிமை..

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

ஆக்ஷன் மற்றும் பைக் ஸ்டண்ட்ஸ் காட்சிகள் நிறைந்துள்ள படமாக வலிமை நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிந்துவிட்டதாகவும்,

இப்படத்தை இந்த வருடத்தின் இறுதியில் வெளியிட உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.