நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்த ஆண் குழந்தை.. மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட பதிவு!!

89

சிவகார்த்திகேயன்…

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர்.

இவர் நடிப்பில் டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மகன் பிறந்துள்ளதை அவரின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…

என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம்” என தெரிவித்துள்ளார்.