தனுஷ் – செல்வராகவன் படத்தின் புதிய தலைப்பு கசிந்தது – என்ன தலைப்பு தெரியுமா?

531

தனுஷ் – செல்வராகவன்..

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன்.

இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் இயக்கியுள்ளார்.

இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்திற்கு புதிதாக ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.