“நான் ஒருவரை காதலித்தேன், ஆனால்..” காதலை பற்றி மனம் திறந்த அனுபமா !

109

அனுபமா பரமேஸ்வரன்…

பிரேமம் படத்தின் மூலம் அந்த படத்தில் நடித்த 3 நடிகைகளும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்கள். அதில் மேரி கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தேன் கூடு தலை என கலாய்க்கப்பட்டு வந்தார். ஆனால் இப்போது அதுதான் அவருக்கு பயங்கர ப்ளஸ் பாயிண்ட்டாக மாறி இருக்கிறது. இப்போதைய நூடுல்ஸ் மண்டைக்கு எல்லாம் முன்னோடி இவர் தான்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவோடு தற்போது கிசுகிசுக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், “நிஜ வாழ்க்கையில் காதலித்துள்ளீரா? என்ற கேள்விக்கு, நான் ஒருவரை காதலித்தேன். ஆனால் அது முறிந்துவிட்டது. நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பின், தனக்கு கேரள உணவுகள் பிடிக்கும் என்றும், பிரியாணியை விரும்பி சாப்பிடுவேன் என்றும், தற்போது ஓவியம் வரைய ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறினார். அனுபமா நடத்திய உரையாடல் வைரலாகி வருகிறது.