படப்பிடிப்பை முடித்த நடிகை பூஜா ஹெக்டே.. வெளியான பீஸ்ட் படத்தின் அப்டேட்!!

213

பூஜா ஹெக்டே..

நடிகர் விஜய்யின் 65வது படம் பீஸ்ட். நெல்சன் இயக்கும் இப்படத்தில், முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடன காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, வேறொரு படத்தின் படப்பிடிப்புக்காக மும்பைக்கு சென்றுள்ளார்.

விமானநிலையத்தில் இருந்து, நடிகை பூஜா ஹெக்டே புகைப்படங்களை தற்போது வெளியாகியுள்ளது.