பணமாலை அணிந்து குபேர பூஜை செய்த வனிதா விஜயகுமார் !!

340

வனிதா..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர் அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா,

தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் வனிதா,

தனது சமூக வலைதளப் பக்கத்தில் பண மாலை அணிந்து குபேர பூஜை நடத்திய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அவருடன் மகளும் பண மாலை அணிந்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.