சஸ்பென்ஸ் த்ரில்லரில் கலக்கும் அருள்நிதியின் மிரட்டலான டைரி படதின் டீசர் வெளியானது !!

270

டைரி பட டீசர்..

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி.

இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் உள்ளிட்ட பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள டைரி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடித்துள்ளார் . பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராண் எதான் யோகன் இசையமைத்துள்ளார் .

சமீபத்தில் டைரி படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.

இதில் காட்சிகள் ஒவ்வொன்றும் பயமுறுத்தும் வகையில் உள்ளதால் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் திரையரங்கு திறக்கப்பட்டால் உடனடியாக ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.