‘சாகுந்தலம்’ படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்.. சுவாரஸ்ய தகவல் !

124

சாகுந்தலம்..

தெலுங்கில் பிரம்மாண்டமான தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் படம் ‘சாகுந்தலம்’. குணசேகர் இயக்கி வரும் இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார்.

காளிதாஸ் எழுதிய ‘சாகுந்தலா’வை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. துஷ்யந்த் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன்,

அனுசுயா கதாபாத்திரத்தில், ‘அருவி’ படத்தில் நடித்த அதிதி பாலன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தற்போது இப்படத்தில் கூடுதலாக ஒரு ஸ்டார் அட்ராக்ஷன் இணைக்கப்பட்டிருக்கிறார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா, ‘பரதா’ கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நேற்று முதல் அர்ஹா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அடுத்த பத்து நாட்கள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம்.

இதன் மூலம் அல்லு குடும்பத்தில் நான்காவது தலைமுறையிலும் நடிக்க வந்துவிட்டார்கள்.

அர்ஹா சினிமாவில் நடிக்க வந்துள்ளதற்கு தெலுங்குத் திரையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.