பிரபல மூத்த நடிகருடன் இணையும் நடிகர் அதர்வா – புதிதாக துவங்கும் திரைப்படம்!!

78

அதர்வா..

பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன.

இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதையடுத்து நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படத்தை வாகை சூடவா, களவாணி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளார்.

இப்படத்தில் திரையுலகில் மூத்த நடிகரான ராஜ்கிரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஆம் இப்படத்தில் நடிகர் அதர்வா, ராஜ்கிரணுக்கு பேரனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.