மாபெரும் சாதனை படைத்த கே.ஜி.எப் டீசர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

100

கே.ஜி.எப்..

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற திரைப்படம் கே.ஜி.எப்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக தயாராகியுள்ளது.

இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் Youtubeல் சுமார் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.