துணிச்சல் போலீசாக விக்ரம் பிரபு, கொடூர அதிகாரியாக லால்.. பட்டையை கிளப்பும் டாணாக்காரன் டீசர்!!

264

டாணாக்காரன்..

சில வாரிசு நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் அதை தக்கவைத்துக் கொள்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான். குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே அதில் கோலோச்சியுள்ளனர்.

இதில் அந்தப் பக்கமும் இல்லாமல் இந்தப் பக்கமும் இல்லாமல் மதில்மேல் பூனையாக மாட்டிக்கொண்டு முழிப்பவர்தான் விக்ரம் பிரபு. ஆரம்பத்தில் கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தார்.

ஆனால் அதன்பிறகு தொட்டதெல்லாம் தோல்வி தான். கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான பதிமூன்று படங்களில் புலிகுத்தி பாண்டி படம் மட்டுமே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவும் நேரடியாக சன் டிவியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்பதற்காக தற்போது டாணாக்காரன் எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து டாணாக்காரன் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

போலீஸ் பயிற்சிக்கு வரும் இளைஞர்களிடம் மூத்த அதிகாரிகள் எவ்வளவு கொ.டூ.ரமாக நடந்து கொ.ள்கின்றனர் என்பதை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது டீசர்.

மேலும் நீண்ட நாட்களாக ஒரு பெரிய வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் ஒரு முரட்டு வெற்றி கொடுக்கும் என நம்பலாம்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாதைக்கு திரும்பிய விக்ரம் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்.