விஜய் தொலைக்காட்சியில் துவங்கும் புத்தம் புதிய சீரியல் – விஜய் டிவியின் அடுத்த அதிரடி!!

109

விஜய் டிவி…

சின்னத்திரையில் டாப்பில் இருக்கக்கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி.

இதில் தற்போது பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

சமீபத்தில் கூட தீபக் மற்றும் நட்சத்திரா நாகேஷ் இணைந்து நடிக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியல் துவங்கியது.

இந்நிலையில் விரைவில் மற்றொரு புதிய சீரியல் விஜய் தொலைக்காட்சியில், ‘நம்ம வீட்டு பொண்ணு’ எனும் புத்தம் புதிய நெடுந்தொடர் துவங்கவுள்ளதாம்.

மேலும் இந்த சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ளார் நடிகை வைஷாலி.

இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி உள்ளிட்ட சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.