தான் இறந்துவிட்டதாக இணையத்தில் பரவிய வீடியோ, அதிர்ச்சியில் நடிகர் சித்தார்த் செய்த விஷயம்!!

98

சித்தார்த்..

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர், இவர் நடிப்பில் பல சிறந்த திரைபடங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவரின் அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் சித்தார்த், அவ்வப்போது ட்விட்டரில் எதையாவது பதிவிட்டு வருவார்.

அதன்படி தற்போது யூடியூப்பில் இளம் வயதிலே இறந்த நட்சத்திரங்களின் பட்டியலில் இவரின் புகைப்படத்தையும் சேர்த்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சித்தார்த் அந்த வீடியோவின் மீது பல வருடங்களுக்கு முன் புகார் அளித்துள்ளார், ஆனால் யூடியூப் இந்த வீடியோவில் இந்த தவறும் இல்லை என பதிலளித்துள்ளது.

இதற்கு சித்தார்த் “அட பாவி” என ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.