ஸ்லீவ்லெஸ் புடவையில் ஸ்லிம்மாக இருக்கும் VJ ரம்யா.. புகைப்படத்தை வட்டமிடும் இளசுகள்!

118

விஜே ரம்யா…

தமிழ் சினிமாவில் மொழி படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜே ரம்யா. அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் இவர் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதன்பிறகு மங்காத்தா படத்தில் செய்தி வாசிப்பாளராக ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன்பிறகு தொடர்ந்து ஒரு சில படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இவர் படங்களில் கவனம் செலுத்துவதை விட டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்தி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றார்.

இருப்பினும் இவர் சமீப காலமாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தார்.

சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மீண்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார்.

இருப்பினும் சமூகவலைதளத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது அதற்கு அப்படியே எதிர்மாறாக ட்ரெடிஷனல் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது ஒல்லியாக இருக்கும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..