பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை சன்னி லியோன்..!

107

சன்னி லியோன்..

ஸ்ரீசாந்த், சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏற்கனவே 2 இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரியாக நடிப்பதாகவும், இப்படத்துக்கு பட்டா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் முன்னணி நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீசாந்தும் சன்னி லியோனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.