நடிகை பிரியாமணியின் திருமணம் செல்லாது- அவரது கணவரின் முதல் மனைவி பகீர் தகவல்!!

100

பிரியாமணியின்..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து தேசிய விருது எல்லாம் வாங்கி சாதித்தவர் நடிகை பிரியாமணி. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

கொஞ்சம் மார்க்கெட் குறையவே பட வாய்ப்புகள் அவ்வளவாக வருவதில்லை. எனவே இவர் முஸ்தப்பா ராஜ் என்பவரை காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் எடுக்கும் புகைப்படங்களை பிரியாமணி ஷேர் செய்த வண்ணம் இருந்தார். இப்போது என்னவென்றால் முஸ்தப்பா ராஜின் முதல் மனைவி ஆயிஷா, நடிகை பிரியாமணியின் திருமணம் செல்லாது.

இன்னும் எனது கணவரிடம் இருந்து நான் விவாகரத்து பெறவில்லை, விவாகரத்துக்கு நீதிமன்றனத்தை கூட நாங்கள் நாடவில்லை என கூறுகிறார்.

ஆனால் முஸ்தப்பா தரப்பில் அவர் கூறுவது அனைத்தும் பொய், விவாகரத்து பெற்றுவிட்டோம் என கூறி வருகிறார்.