எனிமி படத்தின் டீசர் எப்போது தெரியுமா – வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

176

எனிமி..

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் இவன்.

இப்படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், எனிமி படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.