ஒர்கவுட் செய்து அசத்திய பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே – அசத்தலான வீடியோ!

86

பூஜா ஹெக்டே…

ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

முகமூடி படத்தின் தோல்வி காரணமாக பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் வராததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டே, பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, இன்று இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில், தான் ஒர்கவுட் செய்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

இணையத்தில் பரவும் அந்த வீடியோ இதோ..