விறுவிறுப்புக்கு குறைவில்லாமல்.. மிஸ்டரி த்ரில்லரில் சோலோ ஹீரோயினாக மிரட்டிய ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ படத்தின் டீசர்..!

149

‘திட்டம் இரண்டு’..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திட்டம் இரண்டு பிளான் பி’ திரைப்படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பான ‘கனா’ படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின், கதையின் நாயகியாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டாலும், தமிழக அரசு அனுமதி கொடுத்த பின் முழு படத்தையும் சென்னையிலேயே இயக்கி முடித்துள்ள படக்குழு, ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யவும் தேதி குறித்து விட்டனர்.

தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இந்த படத்தின் மீதான, எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் உள்ளது.

இரண்டு பேர் கொ.லை செய்யப்பட, அந்த கொ.லையை கண்டு பிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்… கொ.லை.காரரை கண்டு பிடிக்க போராடுவதை சற்றும், விறுவிறுப்பு குறையாமல் எடுத்துள்ளார் இயக்குனர்.