இரண்டு நாயகிகளுடன் ரொ மான்ஸ் செய்யும் விஷால்!!

1026

இரண்டு நாயகிகளுடன் விஷால்..

கோலிவுட்டின் பிரபல கதாநாயகர்களுள் ஒருவரான விஷால் திரையுலகில் எண்ட்ரி கொடுத்து 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதை சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடினார்கள். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோக்கியா படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து தற்போது இவர் தனது 28வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கி வரும் இந்த படத்தை, விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா என்று இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளார்களாம். இது தவிர படத்தை பற்றிய மற்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடைசியாக தல அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்திலும், ரெஜினா கசாண்ட்ரா சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திலும் நடித்துத்திருந்தது குறிப்பிடத்தக்கது.