பிக்பாஸ் கவினின் லிப்ட் திரைப்படம் OTT- ல் ரிலீஸா! வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்!

473

லிப்ட் ..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையேபெரியளவில் பிரபலமான சின்னத்திரை நடிகர் தான் கவின்.

இவர் தற்போது லிப்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமிர்தா நடிக்கின்றார்.

மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ள ‘என்ன மயிலே’ என்ற பாடல் இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் லிப்ட் படத்தின் வெளியீடு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதில் “லிப்ட் திரைப்படம் 100% இருக்கைகளுடன் திரையரங்கில் தான் வெளியாகும். OTT-ல் இப்படம் நேரடியாக வெளியாகும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.

மேலும் இப்படம் திரையரங்கு அனுபத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளனர்.