விபத்தில் சிக்கிய யாஷிகாவின் நிலைமை?- அவரது தோழி குடும்பத்தின் சோகமான பதிவு!!

244

யாஷிகா ஆனந்த்..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்நிகழ்ச்சிக்கு பிறகு நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.

அதன்பிறகு சில நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வந்த அவர் படங்களிலும் நடித்து வந்தார்.

அண்மையில் அவர் தனது தோழியுடன் காரில் செல்லும்போது விபத்தில் சிக்கியுள்ளார். அந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தற்போது குணமாகி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது யாஷிகாவின் தோழி பவானியின் தங்கை ஷ்ரவானி, பவானியை பற்றி விசாரித்தவர்களுக்கு மிகவும் நன்றி. எங்கள் குடும்பம் எந்த மனநிலையில் உள்ளது என்பதை சொல்ல கூட முடியவில்லை என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.