திரில்லர் கதைக்களத்தில் நடிகை நயன்தாரா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

82

நயன்தாரா..

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த என, இரு படங்களின் படப்பிடிப்பை நயன்தாரா முடிவித்துவிட்டார்.

மேலும் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது நடந்து வருகிறது.

இந்நி்லையில் நடிகை நயன்தாரா, புதிதாக உருவாகவும் திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருகிறாராம்.

இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்குகிறார்.

நடிகை நயன்தாரா, இதற்கு முன் மாயா, ஐரா, டோரா, இமைக்க நொடிகள் போன்ற திரில்லர் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.